ஈரான் போர் ‘கணக்கு’ - சீனாவுக்கு லாபமா, நஷ்டமா?

ஈரானில் அமெரிக்கா நீண்ட கால போரை மேற்கொண்டால், அதன் ராணுவ பலம் குறைவதோடு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தனது கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, ஆசியாவில் சீனா தன்னை வலுவான பிராந்திய உத்தியாளராக மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பை தோதாக்கிக் கொடுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

சர்வதேச உறவுகளில் முக்கியத்துவம், ஆசிய பிராந்தியத்தில் வலுவான இடம் தாண்டி ஈரான் போர் மூலம் சீனா அறுவடை செய்யக் கூடிய இன்னொரு நீண்ட கால பலனும் இருக்கிறது. ஈரான் போர் மூலம் அமெரிக்க, இஸ்ரேலிய ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சியை முன்னெடுப்பதும், குறிப்பாக புதிய ட்ரோன்கள் பற்றி தெரிந்துகொள்ளவும், போர் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வசதியான களம் சீனாவுக்குக் கிடைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் வைத்து, ஈரான் போரால் சீனாவுக்கு ஏற்படப் போகும் பொருளாதார பாதிப்பு என்பது குறுகிய காலத்துக்கானதாகவும், காலப்போக்கில் சீனா தனது ஆதிக்கத்தை ஆசியா மற்றும் பிற நாடுகளில் அதிகரிக்க முக்கியமான அடித்தளமாக அமைவது என்பது நீண்ட காலத்துக்கான ஆதாயமாகவும் இருக்கக் கூடும் என சர்வதேச உறவுகள் பற்றி ஆராயும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இதை தெளிவாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

ஈரான் போர் ‘கணக்கு’ - சீனாவுக்கு லாபமா, நஷ்டமா?
ஈரான் போரும் ‘நிதான’ இந்தியாவும் - 5 காரணங்கள்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in