‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை’ என்று விசிக தலைவர் திருமாவளவன் விவரித்திருக்கும் நிலையில், “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைதான் விஜய் என்று சொன்ன திருமா, இப்போது அந்தப் பிள்ளையை சீராட்டி, தாலாட்டி வளர்த்தெடுக்கப் போயிருக்கிறாரா... இப்போது அம்பேத்கர், பெரியார் எல்லாம் எங்கே போனார்கள்..?” என்ற விமர்சனம், விசிகவுக்குள்ளேயே இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இதை உறுதி செய்யும் விதமாகவே, விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, திருமாவளவன் அணுகுமுறையைக் குறிப்பிட்டு, அவர் மீதான அதிருப்திக்கான காரணங்களையும் அவர் பட்டியிலிட்டுள்ளார். இதேபோல் விமர்சனத்தை முன்வைக்கும் விசிக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறிய தகவல்களுடன் உள்ளரசியலை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது