டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எதிர்ப்புக் காட்டாமல் கலந்து கொண்டதுடன், “மத்திய அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புத் தருவோம்” என்று அந்தக் கூட்டத்தில் பேசி இருப்பது ஆளும் பாஜக வட்டாரத்தை ஆனந்தப்பட வைத்திருக்கிறது. தங்களின் கொள்கை எதிரி பாஜக என்று சொன்னாலும் ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே அரசியலையும் அரசு நிர்வாகத்தையும் தனித் தனி டிராக்கிலேயே வைத்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறார்கள் தவெக மாநில நிர்வாகிகள்.
எதற்கும் வாய் திறக்காமல் இருக்கிறார் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், மத்திய அரசுடன் விஜய் நல்லுணர்வை பேண விரும்புவதாகவே தெரிகிறது. அவரின் இந்த அணுகுமுறையால் தானோ என்னவோ, பேரிடர் நிவாரண நிதியாக 1,000 கோடி ரூபாயை தமிழகத்துக்குத் தந்திருக்கிறது மத்திய அரசு.
இப்போதிருக்கும் சூழலில் விஜய்க்கு இத்தகைய அணுகுமுறை அவசியம்தான். ஆனால், இதே ரூட்டில் பயணித்து தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசிடம் தடையின்றி பெற்று விடுவாரா விஜய் என்பதை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.