சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வர் பதவிக்கான இந்த ‘பவர் டீலிங்’ கதையின் பின்னணியை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். இறை நம்பிக்கை சற்று தூக்கலாகவே கொண்டவர் டி.கே.சிவகுமார். மாநில உரிமைகள் விஷயத்தில் கெடுபிடி காட்டக் கூடியவர். இத்தகையச் சூழலில் கர்நாடக முதல்வர் பொறுப்பை டி.கே.சிவகுமார் எடுப்பார் என்றால், அவருக்கு சிறுபான்மையினர் நம்பிக்கையை வென்றெடுப்பது ஒரு பெரிய சவாலாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.
அதுதவிர அடுத்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்குள் கர்நாடகாவின் லிங்காயத், வொக்கலிகா சமூகத்தினர் ஆதரவை பாஜக பக்கமிருந்து காங்கிரஸுக்கு மடைமாற்றவும் வேண்டியிருக்கும். அதேபோல் நாற்காலிக்கு எஞ்சிய காலத்தில் பிரச்சினை வராமலிருக்க சித்தராமையின் ஆதரவாளர்களின் நன்நம்பிக்கையையும் பெற வேண்டும். மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் எப்போதுமே உறுதியாகத்தான் இருந்து வருகிறார். இவ்வாறாக, முழு பின்புலத்துடன் கர்நாடக அரசியல் சூழலை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.