“பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயரும். குறிப்பாக அன்றாடம் உபயோகிக்கக் கூடிய பொருட்களின் விலை அதிகரிக்கும். இன்னொரு பக்கம் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு வருகிறது. ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதிய உயர்வு தர இயலாது சூழல்கள் வரும். அதேவேளையில் விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களை வெகுவாக பாதிக்கப்படுவர். நாம் நிச்சயமாக கடினமான காலத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும்” என்று பொருளாதார நிபுணர்கள் அலர்ட் தருகின்றனர்.
அதேவேளையில், “இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதே சரியானதாக இருக்கும். இது நிச்சயமாக 3, 4 மாதங்களில் மாறிவிடும்” என்றும் நம்பிக்கைத் தருகின்றனர். பொருளாதார ரீதியில் இந்தியர்கள் இனி கடின காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை வருமா என்பது குறித்து முழுமையாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.