அரசியல்

பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலவரம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் ரூ.27,400 கோடி மதிப்​பில், சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய பசுமை வழிப் பன்னாட்டு விமான நிலை​யம் அமைக்க முந்​தைய திமுக அரசும், மத்​திய அரசும் திட்​ட​மிட்​டிருந்​தன. இதற்​காக ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்​களில் உள்ள விவ​சாய விளை நிலங்​கள், நீர்​நிலைகள் மற்​றும் குடி​யிருப்​பு​களை கையகப்​படுத்​தும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வந்தன.

குறிப்​பாக ஏகனாபுரம் கிராமம் மொத்​த​மாக இத்திட்டத்துக்​காக குறி வைக்​கப்​பட்​ட​தால் தங்​களின் வாழ்​வா​தா​ர​மும் கிராம​மும் முற்​றி​லும் அழிந்​து​விடும் என்று அஞ்​சி, அப்​பகுதி மக்​கள் கடந்த 1,400 நாட்​களுக்​கும் மேலாகத் தொடர் போராட்​டங்​களை நடத்​தினர். இந்நிலையில், தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் விஜய் தமிழக முதல்​வ​ராகப் பொறுப்​பேற்ற பிறகு, இத்​திட்டத்​துக்​கான நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டன.

விமான நிலை​யம் அமைய உள்ள 13 கிராமங்களில் நிலம் விற்க, வாங்க இன்​னும் தடை நீடிப்​ப​தாக அப்​பகுதி மக்​கள் தெரிவிக்​கின்​றனர். இத்​திட்​டத்தை முழு​மை​யாக ரத்து செய்து அரசாணை வெளி​யிடு​வதுடன், நிலம் விற்க, வாங்க உள்ள தடைகளை நீக்க வேண்​டும் என்​றும் வலியுறுத்​துகின்​றனர். தற்போதைய நிலவரத்தை முழுமையாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT