உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இச்சூழலில், மக்களவை எம்.பி-க்களான ஹைதராபாத்தின் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் உத்தரப் பிரதேச நாகினா தொகுதியின் சந்திரசேகர ஆசாத்தின் ‘ஆசாத் சமாஜ் கட்சி - கான்ஷிராம்’ ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள்தொகை 21 சதவீதம். முஸ்லிம் மக்கள்தொகை 19 சதவீதம். மொத்தம் 40 சதவீதம். சுமார் 41 தொகுதிகளில் தலித், முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்தப் பின்புலத்தில் ஒவைசி - ஆசாத் கூட்டணியின் தாக்கம் குறித்து விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.