அரசியல்

‘ஆபரேஷன் நயினார்’... திமுகவின் ‘நாக்-அவுட்’ ப்ளான்!

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியில் யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும், எத்தனை இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதை எல்லாம் விட யாரை எல்லாம் ஜெயிக்கவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை இம்முறை உறுதியான முடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி திமுக தலைமையின் நாக்-அவுட் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சுட்டுகிறார்கள். இதுகுறித்து திமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக இதுவரை 3 விதமான சர்வேக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தலைவர் ஸ்டாலினே தனது நேரடிப் பார்வையில் வேட்பாளர் தேர்வை இறுதி செய்து வருகிறார்” என்கின்றனர். இது குறித்த உள்ளரசியலை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

          
SCROLL FOR NEXT