“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறிய கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது.
தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை வைகோ இப்போது உதிர்த்திருக்கும் ‘துரதிருஷ்டவசமாக’ என்ற வார்த்தை அறிவாலயத்து மக்களை துடிக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
வைகோ தங்களுக்கு குட்பை சொல்கிறார் என்பதைவிட, திமுகவை ‘தீயசக்தி’ என்று தூற்றிக் கொண்டிருக்கும் விஜய்யின் பக்கம் சாய்கிறாரே என்பது தான் திமுகவினரை ரொம்பவே தகிக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக திமுக-வின் மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியதை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.