சட்டபேரவை தேர்தலையொட்டி போட்டியிடும் மற்றொரு கட்சிக்கும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், சீமானுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியக் குடியரசு கட்சிக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்கியிருப்பது நாதக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான பெயரைக் கொண்ட இரு சின்னங்கள் தேர்தல் களத்தில் இருப்பது வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்து விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.