அரசியல்

இண்டியா கூட்டணிக்கு திமுக ‘குட்பை’... பாஜகவுக்கு சாதகம் ஏன்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறிவித்திருக்கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது.

திமுக-​வின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்றுதான். அதேசம​யம் இந்த விஷ​யத்​தில் ஒரே கல்​லில் இரண்டு மாங்காய்களை சத்​தமில்​லாமல் அடித்​துச் சாய்த்து​விட்ட திருப்தியில் இருக்​கிறது பாஜக. இதன்மூலம், தொடக்கம் முதலே தங்​களுக்கு தொல்லை கொடுத்து வரும் இண்​டியா கூட்​ட​ணி​யை​யும் கலகலக்க வைத்​து​விட்ட சந்​தோஷத்​தில் திளைக்​கிறது அந்​தக் கட்​சி. இதன் பின்புல அரசியலை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT