“திமுக கூட்டணியில் இருக்கும் லெட்டர் பேடு கட்சிகளுக்கும் ஒரு சீட், நமக்கும் ஒரு சீட் தான் என்றால் எப்படி சரியாக இருக்கும்? நமக்கான அங்கீகாரம் இல்லையெனில், கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரீசிலனை செய்ய தயங்கக் கூடாது” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் நிர்வாகிகள் கொந்தளித்து வருகிறார்கள்.
“இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கட்சியை நடத்துபவர்களுக்கு ஒரு எம்பி சீட், மூன்று எம்எல்ஏ சீட்களைத் தருகிறார்கள். அவர்களைக் காட்டிலும் பலமாக இருக்கும் நமக்கு இம்முறை ஒரு ராஜ்ய சபா சீட்டும், மூன்று எம்எல்ஏ சீட்களும் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஓரிரு இடத்தை வாங்கி அசிங்கப்படாமல் ஒரு ராஜ்ய சபா சீட்டும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளையும் கேட்க வேண்டும்” என்று சொன்னார்களாம். இதன் உள்ளரசியலை விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.