தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு வீசிய ஆதரவு அலை, திமுக, அதிமுக கூட்டணிக்குள் வெடித்த ஈகோ மோதல் போன்றவற்றால் காங்கிரஸ், தேமுதிக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக, விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக எனப் பலமுனைப் போட்டி நிலவியதில், ‘விஜய் அலை’யில் சிக்கி பல ஜாம்பவான்கள் சரிந்துள்ளனர்.
குறிப்பாக திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இதுகுறித்து, விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறிய தகவல்களின் அடிப்படையிலான வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.