“நாங்கள் கட்டுக் கோப்பாக இருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே இருந்த திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் கொளுத்திப் போட்ட ‘ஆட்சியில் பங்கு’ நெருப்பு இப்போது, “எங்களுக்கு 41 தொகுதிகள் வேண்டும்” என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளை மட்டுமே கையகப்படுத்தியது. இந்த நிலையில், இம்முறை காங்கிரஸ் கோட்டாவை 20 தொகுதிகளுக்குள் நிறுத்துவிட வேண்டும் என திட்டம் வைத்திருந்தது திமுக தலைமை. இந்த உள்ளரசியல் நிலவரத்தை விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.