அரசியல்

தவெக ‘தாவல்’களை தடுக்குமா அதிமுக ‘முதியோர்’ கழகம்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செயலாளர் மகேந்​திரனின் விபரீத முடிவைச் சுட்டிக்காட்டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்டர்​களை இனி​யும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்” என அதி​முக ஐடி விங் மாநிலச் செய​லா​ளர் ராஜ் சத்​யன் போட்ட பதிவு, அதி​முக வட்​டாரத்​தில் பேசுபொருளாகி இருக்​கிறது.

தனது பதி​வில், அதி​முக இரண்​டு​பட்டு நிற்க காரணமானவர்​களை​யும் சாடி இருந்த ராஜ் சத்​யன், என்ன காரணத்​தி​னாலோ சில மணி நேரத்​திலேயே தனது பதிவை நீக்​கி​விட்​டார். இது குறித்து அவரை நாம் தொடர்பு கொண்​ட​போது, “கட்சி மீண்டும் செல்​வாக்​கான நிலைக்கு வரவேண்​டும் என்​ப​தற்​காக அந்​தப் பதிவை போட்​டேன். மற்​றபடி யார் மீதும் பழிசொல்​வது நோக்கமில்​லை” என்று முடித்​துக் கொண்​டார். இது விஷய​மாக நம்​மிடம் பேசிய ஐடி விங் பொறுப்​பாளர்​களோ சில தகவல்களைப் பகிர்ந்ததை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT