ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பங்குச்சந்தைப் புள்ளிகளில் இல்லை; சாமானிய மக்களின் தட்டில் இருக்கும் உணவில் இருக்கிறது. சத்தமே இல்லாமல் மாதம்தோறும் அரிசி விலை அதிகரித்து வருவது, ஏழை - நடுத்தர மக்களின் மாதாந்திர வரவு - செலவு கணக்கை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக 26 கிலோ அரிசி மூட்டைக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதல் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண அரிசி சில்லறையில் கிலோ 70 ரூபாய் எனவும், 26 கிலோ மூட்டை 1,800 ரூபாய் எனவும் உயர்ந்துவிட்டது. உயர் ரக அரிசியின் விலை கிலோவுக்கு 82 ரூபாய் ஆக உயர்ந்து, மூட்டை 2,150 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இதன் பின்புலத்தை முழுமையாக அலசுகிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.