பொது

பன்முக நெருக்கடி நோக்கி... - ‘சூப்பர் எல் நினோ’ அலர்ட் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

2026 ஜூலை மாதத்துக்குள் ‘எல் நினோ’ நிகழ்வு தொடங்கிவிடும் என்று அமெரிக்காவின் கடல்சார் - வளிமண்டல அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பொதுவாக, புவி நடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில் சராசரிக்கும் அதிகமான வெப்பம் நிலவும்போது ‘எல் நினோ’ ஏற்படும். கடந்த சில நாள்களாக பசிபிக்கின் வெப்பநிலை அதிகரிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும், பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் பல நூறு மீட்டர்கள் கீழே ‘கெல்வின் அலை’ என்கிற அதிவெப்ப நீரோட்டம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

இது ‘சூப்பர் எல் நினோ’ எனப்படும் தீவிர எல் நினோவை உருவாக்கும் என்று அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த எல் நினோ நிகழ்வு எப்படிப்பட்ட பின்னணியில் வரப்போகிறது என்பதைத் துல்லியமாகக் கவனிக்க வேண்டும். இந்தப் பன்முக நெருக்கடிகளை தெளிவாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT