அண்ணாமலையின் அடுத்த இன்னிங்ஸ்... நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பாஜகவில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர் நிதின் நவீனை டெல்லியில் சந்தித்து அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து தனது முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘ஆன்மீகம் மற்றும் தேசியம்’ ஆகியவற்றை இரு கண்களாகக் கொண்டு புதிய அரசியல் இயக்கம் அல்லது கட்சியை அவர் தொடங்க வாய்ப்புள்ளதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
அண்ணாமலையின் இந்த முடிவைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அண்ணாமலையின் இந்த அதிரடி நகர்வு தமிழக பாஜகவுக்குள் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.