“இந்திய நுகர்வோரைப் பொறுத்தவரை 75% முதல் 80% பரிவர்த்தனைகள் 10 ரூபாயில்தான் நடைபெறுகிறது. அதனால் அவர்கள் பாக்கெட்டுக்கு ஏற்ற விலையில் கொடுக்கிறோம். அதேநேரம் மற்ற நிறுவனங்களைப் போல பொருளின் அளவையோ தரத்தையோ குறைத்து மலிவாக விற்கவில்லை, சரியான விலையில் விற்கிறோம். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, லாபம் வரும்படி பார்த்துக்கொள்கிறோம்” என்கிறார் ரிலையன்ஸ் நுகர்பொருள் நிறுவன (RCPL) இயக்குநர் டி.கிருஷ்ணகுமார்.
உலகளாவிய பொருளாதார சவால்கள், இந்திய நுகர்பொருள் சந்தையின் தற்போதைய நிலை மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் அளித்த சிறப்பு நேர்காணல் இது.