ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் பல வாரங்களுக்கு தொடரக்கூடும் என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகளை ஈரானுக்கு அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதால், ஈரானுக்கு ஆதரவாக இந்தியா பேசுவதில் அதை கடினமான சூழலுக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், உலகளாவிய தெற்கு கொள்கையிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த ஆண்டு புதுடெல்லி பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. இதில் ஈரானும், ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றன. இப்போதைய சூழலில் இந்த இரு நாடுகளும் எதிரெதிராக உள்ளன. இந்தச் சூழலில் யார் பக்கம் பேசுவது என்பது இந்தியாவுக்கு நெருக்கடி. ஆகவே, இஸ்ரேலுடனான நெருக்கம், ஈரானுடனான மங்கிப்போன உறவு, அமெரிக்காவின் அழுத்தங்கள், காமேனியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் உடன் இந்தியா வலுப்படுத்தி வரும் உறவு ஆகியனவற்றை காமேனி படுகொலையில் இந்தியா காட்டும் நிதானத்துக்கும் மவுனத்துக்கும் காரணிகளாக புரிந்துகொள்ளலாம். இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.