பொது

4 மாதத்தில் ரூ.1 கோடி... அசத்திய இளைஞரின் ஸ்டார்ட்-அப் அனுபவம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த உஜ்வல் நர்​கோட்ரா என்ற 24 வயது இளைஞர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிங்க் ​பிளீஸ் என்ற ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இதைத் தொடங்​கிய 4 மாதங்​களி​லேயே 1 கோடி ரூபாயை அவர் ஈட்டியுள்ளார். இது தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் அவர் ஒரு வீடியோவை வெளி​யிட்​டுள்​ளார். அந்த வீடியோவில் அவர் பகிர்ந்தவற்றைப் பார்ப்போம்.

“இதற்கு முன்பு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். பின்​னர் அதை விட்​டு​விட்டு இந்த ஸ்டார்ட்-அப் நிறு​வனத்​தைத் தொடங்கினேன். என்னுடைய வளர்ச்சிக்குப் பின்​னால் மூன்று கட்ட செயல் திட்​டம் உள்ளது. படைப்பாளி​கள், அதாவது கன்டென்ட் கிரியேட்டர்ஸ் உயர்​ தர​மான உள்​ளடக்​கத்தை உருவாக்கினாலும், அதிக அளவி​லான டி.எம். எனப்படும் நேரடி மெசேஜ்களை நிர்வகிப்​ப​தில் சிரமப்படுகின்​றனர். அவர்​களுக்​குத் தேவை​யான சேவை​களை வழங்குவதுதான் எங்​களது நிறு​வனத்​தின் பணியாகும்.

கன்டென்ட் கிரியேட்டர்ஸ் சிறந்த உள்​ளடக்​கத்தை வெளியிட்​டாலும், அதைத் தொடர்ந்து வரும் நேரடி மெசேஜ்கள் மற்​றும் அதிக அளவி​லான கருத்​துகளை கட்டுப்​படுத்த முடி​யாமல் சிரமப்படுகின்​றனர். அந்த இடைவெளி​தான் அவர்​களின் வளர்ச்சிக்​குத் தடை​யாக உள்​ளது. அதைத் தீர்க்​கவே இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

தொடக்கத்தில் எங்களது தளத்தின் பயன்பாட்டை கட்டணமின்றி படைப்பாளிகளுக்கு வழங்கினோம். எங்களது நோக்கம் அதுவாகவே இருந்தது. அது எங்களை மிக எளிதாக எல்லோரையும் அணுக உதவியது. குறைவான செலவில் ஆற்றல்மிக்க ஆட்டோமேஷன் இன்ஜினை வடிவமைத்தோம். அந்த முதல் பதிப்பை V1 அறிமுகம் செய்தோம்.

அதன் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்ஸிடம் இருந்து எங்கள் தளத்தின் பயன்பாடு சார்ந்து பல்வேறு பின்னூட்டங்களை பெற்றோம். இதில் வேடிக்கை என்னவென்றால், எங்களது தளத்தின் சேவையை ஆரம்ப நிலையிலேயே கன்டென்ட் கிரியேட்டர்கள் பலர் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொண்டோம். இதன்​ மூலம் 1 கோடி ரூபாயை 4 மாதங்​களில் ஈட்​டி​யுள்​ளேன். எனது அடுத்த இலக்கு 10 கோடி ரூபாயாகும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நிதி ஆதார உதவி ஏதுமின்றி நான்கு மாதத்தில் 1 கோடி ரூபாயை ஈட்டியுள்ளோம். இதன் பின்னணியில் குழு எதுவும் இல்லை. எங்களது நோக்கத்துக்கு செயல் வடிவம் மட்டுமே கொடுத்தோம். கன்டென்ட் கிரியேட்டர்ஸ் எதிர்கொண்ட சிக்கலுக்கு விரைந்து தீர்வு கண்டோம். இப்போது அதற்கான பலனை வெகுமதியாக சந்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டும்தான்” என தான் பகிர்ந்த வீடியோவுக்கு கேப்ஷன் உஜ்வல் கொடுத்துள்ளார்.

உஜ்வலின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதே நேரத்தில் இதற்கு கலவையான கமெண்ட்கள் வந்துள்ளன. அவரது இந்த ஸ்டார்ட் அப் முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர். சிலரோ அவரது 10 கோடி ரூபாய் டார்கெட்டை அடைவதற்கான யோசனையை முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT