பாரதிராஜா எனும் ஆளுமையை சில விவரிப்புகளுக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர் பேசித் தீர்க்க முடியாதவர். அவரது நாயகிகள் பேசிய திரைமொழி பற்றி தனி ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். அவருடைய திரைப்படங்கள் காதலை மட்டுமல்ல, காதலின் பிற பரிமாணங்களை சுவாரஸ்யங்களுடன் பேசியவை. “சாதி, மத பேதங்கள் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்னு” வரிக்கேற்ப சாதி மறுப்பை சமூகத்துக்கு வலிமையான ஆயுதமான திரைவழி சொன்னவர்.
பெண் சிசுக் கொலையை ‘கருத்தம்மா’வாக கண்டித்தவர்தான் காலத்திற்கேற்ப சினிமா நுணுங்களின் தன்னைப் பொருத்திக் கொண்டு ‘பொம்மலாட்டம்’ போன்ற திரைப்படத்தையும் கொடுத்தவர். அல்லிநகரம் டூ சினிமாவின் ஓயாத அலையான பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாற்று சுவாரஸ்யங்களைத் திரும்பிப் பார்க்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.