சினிமா

நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

குணச்சித்திரம், நகைச்சுவை குணச்சித்திரம், ‘டார்க் ஹ்யூமர்’ குணச்சித்திரம், கதையின் நாயகன் என எவ்வாறான கதாபாத்திரத்தையும் ஜார்ஜ் மரியானுக்கு கொடுக்கலாம். அது எவ்வளவு சிறிய அல்லது பெரிய கதாபாத்திரமாகவும் இருக்கலாம். ஆனால், ஏற்ற கதாபாத்திரத்தைப் பார்வையாளர்கள் கூர்ந்தும் ஆழ்ந்தும் ரசிக்கும்படி நடிகருக்கும், பார்வையாளருக்குமான பிணைப்பைச் சாத்தியப்படுத்தும் ரசவாதம் கைவசமான கலைஞர்தான் ஜார்ஜ் மரியான்.

ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அப்படி இருப்பார். அந்த இயல்பான தன்மையே ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக மாறும். இதுதான் நடிப்பில் அவரது ‘இயல்பின் உச்சம்’ வெளிப்படும் தருணம் எனலாம். சக கதாபாத்திரங்களைத் துன்புறுத்தாமல், கதையின் போக்கு, காட்சியின் சூழலைக் கொண்டு அவர் நிகழ்த்தும் நயமான நகைச்சுவை மேஜிக், ‘கையறு நிலையின் நகைச்சுவையாகவும் ஆர்ப்பாட்டமில்லாத அங்கதமாகவும்’ மாறிவிடுகிறது. அவருடைய இந்தப் பாணியின் தேவை தமிழ் சினிமாவின் மாஸ் மசாலா படங்களுக்கும் மிடில் சினிமாக்களுக்கும் உளவியல் கலந்த உணர்வூக்கியாக மாறிவிட்டது. நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதையை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT