திருமலை: ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயில் கொடிக் கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஆகம விதிகளுடன் பண்டிதர்கள் வேதம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் தொடங்கப்பட்டது. பிரம்மோற்சவம் ஜூலை மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.