சினிமா

நான் கண்ட சிகரம் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 27

Guest Author

கமல் அண்​ணா​வின் ‘உத்​தம​வில்​லன்’ படத்​தில் கே.​பாலசந்​தர் சாருடன் நடித்​ததை முன்பு குறிப்​பிட்​டிருந்​தேன். அப்​போது, “ஐயா, உங்க சிஷ்யன் ஒழுங்கா நடிக்​கிறே​னா?

உங்க பேரை காப்​பாத்​துறே​னா?” என்று கேட்​டதை​யும் அதற்கு அவர் “போடா படவா...” என்று சிரித்​துக் கொண்டே என் முதுகில் தட்​டியதை​யும் கூறி​யிருந்​தேன்.

அவருக்​கும் எனக்​கு​மான பந்​தம் எங்​கிருந்து தொடங்​கியது என்று நினை​வில்​லை. அவர் இயக்​கிய ‘நிழல் நிஜ​மாகிறது’, ‘அரங்​கேற்​றம்’ மாதிரி​யான திரைப்​படங்​கள் வெளி​யான காலங்​களில் எனக்கு 15, 16 வயதிருக்​கும். அந்​தப் படங்​களைப் பார்த்து மிரண்டு போய், எப்​படி​யா​வது கே.​பாலசந்​தர் சாரின் ஒரு படத்​திலா​வது நடித்​து​விட்​டால் போதும், பெரிய நடிக​னாகி விடலாம் என்ற கனவுடன் அலைந்து கொண்​டிருந்​தேன்.

அப்​போது நான் அதி​க​மான தலை​முடி​யுடன் இருப்​பேன். என் ஏரி​யா​வில் என்னை ‘பரட்​டை’ என்​று​தான் எல்​லோரும் அழைப்​பார்​கள். அப்​போது ‘16 வயதினிலே’ படத்​தில் ரஜினி அண்ணா பரட்டை என்ற கதா​பாத்​திரத்​தில் நடித்​திருந்​த​தால் என்​னை​யும் அவருடன் ஒப்​பிட்டு அப்​படி அழைப்​பார்​கள். நானும் அவர் போல ஸ்டைலாக தலை​முடியை கோதி​விட்​டபடி நடப்​பேன்.

          

அந்த கால​கட்​டத்​தில் கே.பி.​சா​ரிடம் எப்​படி​யா​வது நடிக்க வாய்ப்பு கேட்க வேண்​டும் என்று நினைத்​தேன். ஆனால், யார் மூல​மாக கேட்​பது என்று எனக்கு தெரிய​வில்​லை. பின்​னர் நான்டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட் ஆனதும், கணேஷ் குமார் என்ற படத்​தொகுப்​பாளர் எனக்கு பழக்​க​மா​னார். நானும் அவரும் ஒரு​மை​யில் பேசிக்​கொள்​ளும் அளவுக்கு நண்​பர்​கள்.

அவர் கே.பி.​சா​ரின் கலாகேந்​திரா நிறு​வனம் தயாரிக்​கும் படங்​களுக்கு எடிட்​டிங் பண்​ணிக் கொண்​டிருந்​தார். அவரிடம் நான், “கே.​பாலசந்​தர் சாரை பார்க்க வேண்​டும்” என்று சொன் னேன். அவர், “ஆஃபீஸுக்கு வந்து பாரு” என்று சொல்​லி​விட்​டார். அப்​போது என்​னிடம் சைக்​கிள் கூட கிடை​யாது.

இதனால் நேராக கலாகேந்​திரா ஆபிஸுக்கு நடந்தே போய் வெளியே ஓரமாக, பவ்​ய​மாக நின்​றேன். பளிச்​சென்று வெள்ளை சட்​டை, வெள்ளை பேன்ட்​டில் கே.பி சார் வரு​வார். அவரை பார்த்​ததும் சான்ஸ் கேட்க போனவன், பயந்து போய் ஓடி வந்து விடு​வேன். பல நாட்​கள் இப்​படியே நடந்​திருக்​கின்​றன.

“வாய்ப்​புக் கேட்​கத்​தானே வந்​தே, கேட்​காமலேயே ஓடினா எப்​படி?” என்று படத்​தொகுப்​பாளர் கணேஷ் குமார் கேட்​பார். “எங்​கய்யா கேட்க முடி​யுது. அவரைப் பார்த்​தாலே பயமா இருக்​கு” என்​பேன். பிறகு டப்​பிங் ஆர்​டிஸ்ட் ஆனதும் பல படங்​களுக்​குப் பேசிக்​கொண்​டிருந்​தேன்.

சின்ன சின்ன வாய்ஸ் கொடுப்​பேன். அப்​போது கே.பி.​சா​ரின் கவி​தாலயா தயாரிப்​பில், எஸ்​.பி.​முத்​து​ராமன் சார் இயக்​கி, ரஜினி அண்ணா நடித்த ‘வேலைக்​காரன்’ படத்​தில் காலஞ்​சென்ற கராத்தே ஹுசைனிக்கு டப்​பிங் குரல் கொடுத்​தேன். பிறகு கார்த்​திக் நடித்த ‘வண்​ணக்​க​னவு​கள்’ படத்​தில் ஆனந்​துக்கு பேசினேன்.

அதைக் கேட்​டு​விட்​டு, “இது யார் பேசி​யது, அந்த வாய்ஸை நோட் பண்​ணிக்​கோ, பேசி​யது யார்னு தெரிஞ்சு வச்​சுக்​கோ?” என்று கே.பி.​சார் சொல்​லி​யிருக்​கிறார். பின்​னர் அவர்​களின் ‘மன​தில் உறுதி வேண்​டும்’, ‘வானமே எல்​லை’ என பல படங்​களில் பேசி​யிருக்​கிறேன். அப்​போது வரை கே.பி.​சாரை பார்த்​தால் பயம்​தான் வரும்.

ஒரு முறை, பெரி​யார் சாலை​யில் இருந்த விஜய் கிருஷ்ணா தியேட்​டரில் குரூப் வாய்​ஸுக்​காக நின்று கொண்​டிருந்​தோம். நாடகங்​களி​லும் திரைப்​படங்​களி​லும் நடித்து வந்த சேலம் கணேசன் என்ற நடிகர், டப்​பிங்​கிலும் வாய்ஸ் கொடுப்​பார். அவருடைய கற்​பனை, நம் கற்​பனைக்கு எல்​லாம் அப்​பாற்​பட்​டது.

நாங்​கள் நின்று கொண்​டிருந்த போது திடீரென்று கே.​பாலசந்​தர் சார் உள்ளே வந்​து​விட்​டார். சேலம் கணேசண்​ணன் மதுப்​பழக்​கம் கொண்​ட​வர். குளிர்​சாதன அறைக்​குள் மது​நாற்​றம் குமட்​டிக்​கொண்டு வந்​தது. “யாருய்யா குடிச்​சுட்டு வந்​தது?” சத்​த​மாக, கோப​மாக கேட்​டார் கே.பி.​சார். எங்​களுக்கு பயம். சேலம் கணேசன் எங்​களைத் தள்​ளி​விட்டு அவர் முன்​னால் வந்​து, “நான்​தான் குடிச்​சுட்டு வந்​தேன்” என்​றார். எங்​களுக்கு உதறல்.

“என்ன தைரி​யம் இருந்​தா, என் முன்​னாலயே வந்து நான்​தான்னு சொல்​லு​வ?” என்று கோப​மாகக் கேட்​டார். “சார்​... ப்ளீஸ். மீனும் நானும் ஒண்​ணு.. தண்​ணி​யில இருந்து எடுத்தா ரெண்டு பேரும் செத்​துரு​வோம்” என்று சேலம் கணேசன் சொன்​னதும், கோபத்​தில் இருந்​தவர் குபீரென சிரித்து விட்​டார். நல்லா பேசறய்​யா? என்று அவரை பாராட்​டி​னார். அப்​போது எனக்கு அவரிடம் வாய்ப்பு கேட்க ஆசை. ஆனால் பயம் காரண​மாகக் கேட்​க​வில்​லை.

‘வானமே எல்​லை’ படத்​தில் நடிகர் தும்பு கைலாஷுக்கு நான் குரல் கொடுத்​தேன். அவருக்கு ஒரு டிராலி ஷாட்​டில் நீண்ட வசனம் வரும். அதை நான் பேசி​யிருந்​தேன். அப்​போது என்​ஜினீயர் அறைக்​குள் வரச் சொன்​னார் கே.பி.​சார். “யாருய்யா நீ, உன் பேரென்​ன?” என்று கேட்​டார்.

“ஐயா, என் பேரு பாஸ்​கர்’ என்​றேன். “வண்​ணக்​க​னவு​கள்ல நீதானே பேசினே, நல்லா பேசுறய்​யா. இந்​தப் படத்​துல, தும்​புக்கு அரு​மையா பேசிருக்​கே” என்று பாராட்​டி​னார். அதிலிருந்து அவர்​கள் தயாரிக்​கும் படங்​களில் தொடர்ந்து பேசினேன்.

பிறகு அவர்​களின் மின்​பிம்​பங்​கள் தயாரித்த டெலி பிலிம்​ஸ், சின்​னத்​திரை தொடர்​களி​லும் நான் பேசினேன். ஒரு வீடு இரு வாசல்’ தொடரில் கணேஷ் என்​பவருக்கு நான் பேசினேன். அப்​போதும்​ என்​ பேச்​சை பா​ராட்​டி​னார்​. இருந்​தா​லும்​ நடிப்​ப​தற்​கு வாய்ப்​புக்​ கேட்​க பயம்​.

(திங்கள்தோறும் பேசுவோம்)

SCROLL FOR NEXT