டெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்க அதிகாரிகள் நேற்று கூறியதாவது: ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். முதல் கட்டத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தாக்குதல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
மேலும், சனிக்கிழமை மாலை காமேனி முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால், நாங்கள் தாக்குதல் நடத்த போவது குறித்து தகவல் கசிந்து அவர் தப்பிவிட்டால் நிலைமை மோசமாகி விடும்.
இதற்கிடையில், சனிக்கிழமை மாலை நடக்க இருந்த ஆலோசனை கூட்டம் காலையிலேயே நடைபெற உள்ளதாக இஸ்ரேல் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தனர். அதனால் வேறு வழியின்றி உடனடியாகத் தாக்குதலை தொடங்கி விட்டோம்.
இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. மேலும் காமேனியின் மகள், மருமகள், பேத்தியும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.