உலகம்

ஹார்​முஸ் ஜலசந்தி யாருடைய கட்டுப்​பாட்​டில் உள்​ளது? - ஈரான், அமெரிக்கா பரஸ்பரம் உரிமை கோரல்

செய்திப்பிரிவு

துபாய்: வளை​குடா பிராந்​தி​யத்​தில் அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்தி தங்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ள​து என ஈரானும் அமெரிக்கா​வும் பரஸ்​பரம் உரிமை கோரி வரு​கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி முற்​றி​லும் அமெரிக்​கா​வின் கட்​டுப்​பாட்​டில் வந்​து​விட்​ட​தாக அந்​நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்​தார்.

இதற்கு மறுப்பு தெரி​வித்​துள்ள ஈரானிய பசீஜ் ராணுவப் பிரி​வின் புதிய தலை​வர் ஹொசைன் தாயெப், ஹார்​முஸ் ஜலசந்தி முழு​மை​யாக ஈரானின் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ள​து என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹொசைன் தாயெப் கூறும்போது, “பிராந்​தி​யத்​தில் ஈரானுக்கு இருக்​கும் செல்​வாக்கை சீர்​குலைக்க அமெரிக்கா போரைத் தொடங்​கியது. ஆனால், ஈரானிடம் கடற்படையோ, விமானப்​படையோ இல்லை என்று கூறிய அமெரிக்கா மீண்​டும் அதில் தோல்​வியையே தழு​வி​யுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்தி ஈரானின் முழுப் பாது​காப்​போடு தொடர்ந்து இயங்கி வரு​கிறது” என்​றார்.

கடந்த பிப்​ர​வரி​யில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்​ரேலும் இணைந்து நடத்​திய வான்​வழித் தாக்​குதலைத் தொடர்ந்​து, கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்​முஸ் ஜலசந்தியை ஈரான் முற்​றி​லு​மாக மூடியது.இதைத் தொடர்ந்து ஈரானிய துறை​முகங்​கள் மீது அமெரிக்க கடற்​படை முற்​றுகை​யைத் தொடங்கியதுடன், பிற நாடு​களின் கப்​பல் போக்​கு​வரத்​து் பாதுகாப்​பை உறுதி செய்​வ​தாக​வும் அறி​வித்​தது.

முன்​ன​தாக, ஜூன் மாதம் இரு நாடு​களுக்​கும் இடையே எட்​டப்​பட்ட தற்​காலிக ஒப்​பந்​தத்​தின் மூலம் நிரந்தர போர்​நிறுத்தம் அறிவிக்​கப்​பட்​டு, வளை​கு​டா​வில் சுதந்​திர​மான கப்​பல் போக்​கு​வரத்தை மீட்​டெடுக்க ஒப்​புக் கொள்​ளப்​பட்​டது. ஆனால், ஒப்​பந்த நிபந்​தனை​களுக்கு மாறாக செயல்​படு​வ​தாக கூறி கப்​பல்​கள் மீது ஈரான் மீண்​டும் தாக்​குதல் நடத்​தி​ய​தால் இந்த ஒப்​பந்​தம் முறிந்தது.

இந்​நிலை​யில் ஈரானிய மூத்த ராணுவ அதி​காரி ரசூல் சனாய்​-​ராத் பேசுகை​யில், “ஒப்​பந்​தத்​தின்​படி அமெரிக்கா தனது வாக்​குறுதிகளை நிறைவேற்​றும் வரை ஹார்​முஸ் ஜலசந்தி திறக்கப்படாது. எதிர்​காலத்​தில் மீண்​டும் போர் மூண்​டால் ஈரான் இன்​னும்​ கடுமை​யான முறையில் பதிலடி கொடுக்கும்” என எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT