கிடியான் ஸார்
ஜெருசலேம்: "அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவுடன் துணை நிற்போம்” என பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் சார்பாக, உயிரிழந்த அப்பாவி மக்களின் நினைவைப் போற்றுவதோடு, அவர்களது குடும்பத்தினரின் துயரத்திலும் நாங்கள் துணை நிற்கிறோம்.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் உறுதியுடனும் தளராத மனத்துடனும் தொடர்ந்து நிற்கும். இந்தியாவுடன் இணைந்து, இந்த அச்சுறுத்தலை உறுதியுடன் எதிர்கொள்ளவும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் எங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்" என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், ஒரு காணொளிச் செய்தியில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.