உலகம்

அமெரிக்காவில் பதின்ம வயதினர் இன்ஸ்டா, முகநூல் பார்க்க கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இன்​ஸ்​டாகி​ராம், முகநூல் பயன்​படுத்​தும் பதின்ம வயதினருக்கு நேரக் ​கட்​டுப்​பாடு விதிக்க மெட்டா நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது.

இதன்படி, அமெரிக்​கா​வில் 29 மாகாணங்​களு​டன் ஏற்​பட்ட 18 பில்​லியன் டாலர் (​ரூ. 1.71 லட்​சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்​புமிக்க இழப்​பீட்டு ஒப்​பந்​தத்தின் ஒரு பகு​தி​யாக, 13-18 வயதுக்​கு உட்​பட்டவர்களின் பாது​காப்பை உறுதி செய்யும் வகை​யில் இந்த செயலிகளில் புதிய கட்​டுப்​பாடு​கள் கொண்​டுவர மெட்டா நிறு​வனம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

நீதி​மன்ற ஒப்​புதலுக்​குப் பிறகு அமலுக்கு வரவுள்ள இந்த விதி​முறை​கள் அடுத்த 10 ஆண்​டு​கள் நடை​முறையில் இருக்​கும். இதன்படி, முகநூல், இன்​ஸ்​டா ஆகிய 2 செயலிகளை​யும் சேர்த்​து சிறு​வர்​கள் ஒரு நாளுக்கு அதி​கபட்​சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்​படுத்த முடி​யும்.

SCROLL FOR NEXT