உலகம்

தேர்தலின்போது பாசிஸ்ட், கம்​யூனிஸ்ட் என பரஸ்பரம் விமர்சித்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பை, நியூ​யார்க் நகர புதிய மேய​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்​தானி நேற்று முன்​தினம் வெள்ளை மாளி​கை​யில் சந்​தித்து பேசி​னார்.

இதைத் தொடர்ந்​து, இரு​வரும் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்​தியா மற்​றும் பாகிஸ்​தான் இடையி​லான மோதலை நிறுத்​தி​ய​தாக, அதிபர் ட்ரம்ப் மீண்​டும் தெரி​வித்​தார்.

ட்ரம்ப் செய்​தி​யாளர்​களிடம் மேலும் கூறும்​போது, ‘‘மம்தானி உடனான சந்திப்பு மிக​வும் பயனுள்ளதாக அமைந்​தது. நாங்​கள் இரு​வரும் நேசிக்​கும் நியூ​யார்க் நகரம் மிகச் சிறப்​பாக செயல்பட வேண்​டும் என்ற பொது​வான ஒரு இலக்கு எங்​களிடம் உள்​ளது.

நியூயார்க் நகர மக்கள் மிகச் சிறந்த மேயரைப் பெறு​வார்​கள் என்று நினைக்​கிறேன். அவர் சிறப்​பாகச் செயல்​பட்​டால், நான் மகிழ்ச்சி அடைவேன். இதில் கட்சி வேறு​பாடு இல்லை என்று நான் சொல்​வேன். உண்​மை​யில், அவர் சில பழமை​வா​தி​களுக்​கும், சில தீவிர தாராள​வா​தி​களுக்​கும் கூட ஆச்​சரி​யத்தை அளிப்​பார் என்று நினைக்​கிறேன்’’ என்​றார்.

அப்​போது அதிபர் ட்ரம்ப்பை இன்​னும் ‘பாசிஸ்ட்' என கருதுகிறீர்​களா என்று மம்​தானியிடம் செய்தியாளர் ஒரு​வர் கேள்வி எழுப்​பி​னார். அப்​போது மம்​தானி பதிலளிக்க முற்​பட்​டார்.

அதற்​குள் ட்ரம்ப் குறுக்​கிட்​டு, “பர​வா​யில்​லை, நீங்​கள் ‘ஆம்' என்று மட்​டும் சொன்​னால் மட்​டும் போதும். அதை விளக்​கு​வதை​விட இது எளிது. இதைப் பற்றி எனக்​குக் கவலை இல்​லை. அதை விட மோச​மாக கூட நான்​ அழைக்​கப்​பட்​டிருக்​கிறேன்’’ என்​றார்​.

நியூ​யார்க் நகர மேயர் தேர்​தல் பிர​சா​ரத்​தின்​போது, அதிபர் ட்ரம்ப்பை ‘பாசிஸ்ட்' என மம்​தானி​யும், மம்​தானியை கம்​யூனிஸ்ட் என்​று ட்ரம்ப்​பும் கடுமையாக விமர்​சித்​திருந்​தனர். இருந்​த​போதும், நியூ​யார்க் நகர மக்​கள் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த மம்​தானியை மேய​ராக தேர்வு செய்​தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT