உலகம்

இந்தியா, சீனா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 25% கூடுதல் வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: கடந்​தாண்டு ஜனவரி​யில் இரண்​டாவது முறை​யாக அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், வர்த்தக பற்​றாக்​குறையை காரணம் காட்டி உலக நாடு​கள் மீது அதிகப்படியான வரியை விதித்​தார். இதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்​து, வர்த்தக சட்​டம் 1974 பிரிவு 301ன் கீழ் புதிய வரி​களை விதிக்க முடிவு செய்​தார்.

அதன்​படி கட்​டாய உழைப்பு தடுப்பு சட்​டங்​களை சரி​யாக நடை​முறைப்​படுத்​தாத நாடு​கள் குறித்​தும், சர்​வ​தேச நாடு​களின் தொழில்​துறை மானி​யங்​கள் குறித்​தும் இரண்டு தனித்​தனி விசாரணை​களை அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி அலு​வல​கம் கடந்த மார்ச் மாதம் தொடங்​கியது. இதில் வெளி​நாட்டு விநியோகச் சங்​கி​லிகளில் நில​வும் கட்​டாய உழைப்பு குறித்த விசா​ரணையை கடந்த ஜூலை​யில் நிறைவு செய்​தது. அந்த விசாரணை​யின் அடிப்​படை​யில் இந்​தியா உள்பட 60 நாடு​கள் மீது 10% முதல் 12% வரை வரி விதித்து ட்ரம்ப் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், இந்​தி​யா, சீனா உள்பட 14 முக்​கிய வர்த்​தகக் கூட்டாளி நாடு​களி​லிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்களுக்கு 10% முதல் 25% வரை கூடு​தல் வரி விதிக்க ட்ரம்ப் நிர்​வாகம் முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இது குறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு ஓரிரு நாட்​களில் வெளியாகும் என்று கூறப்​படு​கிறது. சர்​வ​தேச நாடு​களின் தொழில்​துறை மானி​யங்​கள் குறித்த அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி அலுவல​கத்​தின் விசா​ரணை நிறைவடைந்​ததை அடுத்​து, இந்த புதிய வரி விதிப்பு குறித்து தகவல் வெளி​யாகி இருக்​கிறது.

விசா​ரணை​யின் முடிவு​களை அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி அலுவல​கம் விரை​வில் வெளி​யிடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனிடையே, வர்த்தக ஒப்​பந்​தம் எட்​டப்​பட்​டால், இந்​தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்​குக் குறைந்​த​பட்​சம் 17% வரி விதிக்​க​வும், ஒப்​பந்​தம் எட்​டப்​ப​டா​விட்​டால் 25% வரி வி​திக்​க​வும் ட்ரம்ப் நிர்​வாகம்​ முடிவு செய்​திருப்​ப​தாக தகவல்கள்​ தெரிவிக்​கின்​றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT