உலகம்

அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நேற்று முன்​தினம் அந்த நாட்​டின் அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் அவர் பேசி​ய​தாவது: ஈரானில் அடுத்​தடுத்து இரண்டு அரசுகள் மறைந்​து​விட்​டன. தற்​போது 3-வது அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம்.

அவர்​கள் தற்​போதைய சூழலை நன்​றாக புரிந்து கொண்டு உள்ளனர். ஈரானில் பணவீக்​கம் 250% அதி​கரித்து இருக்​கிறது. அந்த நாட்​டின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்கிறது. அவர்​களின் கரன்சி மதிப்​பிழந்​து​விட்​டது. அமெரிக்கா​வின் சிறப்பு தூதர்​கள் ஸ்டீவ் விட்​காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் ஈரான் பிர​தி​நி​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானிடம் இருக்​கிறது. அந்த யுரேனியத்தை ரஷ்​யா​விடமோ, சீனா​விடமோ வழங்​கும் திட்டத்தை அமெரிக்கா ஒரு​போதும் ஏற்​றுக் கொள்​ளாது. ஈரான் அணு ஆயுதங்​களை தயாரிப்​பதை தடுக்​கவே அந்த நாட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. தற்​போது ஈரானிடம் இருக்​கும் செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை அமெரிக்​கா​விடம் ஒப்​படைக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் சர்​வ​தேச அணு சக்தி ஆணையத்தின் மேற்​பார்​வை​யில் யுரேனி​யத்தை அழிக்க வேண்டும்.

இதுதொடர்​பாக ஈரான் தரப்​பில் அமெரிக்கா​வுடன் விரை​வில் ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய வேண்​டும் அல்​லது அந்த நாடு மிக மோசமான விளைவு​களை சந்​திக்க நேரிடும். நாங்​கள் எங்​கள் பணியை நிறைவு செய்​வோம். ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரானோ அல்​லது ஓமனோ கட்​டுப்​படுத்த முடி​யாது. தவறான பாதை​யில் ஓமன் சென்​றால் அந்த நாட்​டின் மீதும் குண்​டு​களை வீசுவோம்.

அமெரிக்​கா​வில் விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. அந்த தேர்தல் குறித்து நான் கவலைப்​பட​வில்​லை. அரசி​யல் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்​டேன். அமெரிக்​கா​வின் நலன்களுக்கு மட்​டுமே முக்​கி​யத்​து​வம் அளிப்​பேன். இவ்​வாறு அமெரிக்​க அதிபர்​ ட்ரம்ப்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT