உலகம்

அமெரிக்க தொடக்கப் பள்ளியில் சிறுவன் தாக்குதல் நடத்திய வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்

பிறந்தநாள் பரிசாக தாய் கொடுத்த துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்கா​வில் ஒரு தொடக்​கப்​ பள்​ளி​யில் தாக்குதல் நடத்​திய வழக்​கின் விசா​ரணை​யில், பிறந்​தநாள் பரிசாக தாய் கொடுத்த துப்​பாக்​கி​யால் 4 பேரை சிறு​வன் சுட்டுக்கொன்​றது தெரிய​வந்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் ஓரி​கன் மாகாணம் பெண்ட் நகரில் சில்​வர் ரயில் என்ற தொடக்​கப்​பள்ளி செயல்​படு​கிறது. கடந்த 15-ம் தேதி இந்த பள்​ளிக்​குள் துப்​பாக்​கி​யுடன் நுழைந்த கிரிஃபின் ஜே. ஜான் என்கிற 16 வயது சிறு​வன் அங்​கிருந்​தவர்​களை கண்மூடித்தனமாக சுட்​டான். இதில் 5, 8 மற்​றும் 11 வய​தான 3 மாணவர்​களும், ஒரு ஆசி​ரியரும் சம்​பவ இடத்​திலேயே பரிதாபமாக உயி​ரிழந்​தனர். மேலும் 7 வயது சிறுமியும், 54 வயதான ஆசி​ரியையும் காயமடைந்​தனர்.

இதற்​கிடை​யில் தனது 2 மகள்​கள் படிக்​கும் பள்​ளி​யில் துப்​பாக்கி சத்​தம் கேட்​டதை அடுத்து, அந்த வழி​யாக சென்று கொண்​டிருந்த கெய்​லுப் ஜியாமான்கோ (38) என்​கிற நபர் உடனடி​யாக அங்கு விரைந்​தார். பின்​னர் அவர் தாக்​குதல் நடத்​திய கிரிஃபின் ஜே. ஜானை தனது துப்​பாக்​கி​யால் சுட்​டுக்கொன்​றார். இத​னால் பல உயிர்​கள் காப்​பற்​றப்​பட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், 4 பேரை சுட்​டுக்கொன்ற கிரிஃபின் ஜே. ஜானுக்கு அந்​தத் துப்​பாக்​கியை அவனது தாயாரே பிறந்​தநாள் பரிசாக வழங்​கியது தற்​போது தெரிய​வந்​துள்​ளது. ஜானின் தாயார் ஷான்டாய் நிக்​கர்​சன், கடந்த ஆகஸ்​டில் ‘மேவரிக் 88 பம்ப்-ஆக் ஷன் 12-கேஜ்’ துப்​பாக்​கியை சட்​டப்​படி வாங்​கியதும், பின்​னர், அதை பொழுதுபோக்கு பயன்​பாட்​டுக்​காக தனது மக​னுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்​கியதும் போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

மேலும், ஜான் அந்​தப் பள்​ளி​யின் முன்​னாள் மாணவன் என்​றும், அங்கு அவன் சிறப்பு தேவை​கள் கொண்ட மாணவ​ராக படித்ததாகவும் போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்த தாக்​குதலுக்​கான காரணம் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வருகின்​றனர். இச்சம்​பவத்​தில் பள்ளி நிர்​வாகம் சட்ட ரீதி​யாக பொறுப்​பேற்க வேண்​டிய நிலை குறித்து அரசு வழக்​கறிஞர்​கள் ஆராய்ந்து வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT