உலகம்

மினாப் பள்ளி மீது அமெரிக்காவின் தாக்குதல் போர்க்குற்றம்: ஈரான் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நியூயார்க்: ஈ​ரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தி 175 மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​களை கொன்​றது தவறான தாக்​குதல் அல்ல போர்க் குற்​றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறி​னார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தன. அப்​போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்​கப் பள்ளி மீது டொமஹாக் ஏவு​கணை மூலம் அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 175 மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் உயி​ரிழந்​தனர். ஆனால், இந்த தாக்​குதலை ஈரானே நடத்​தி​யிருக்​கலாம் என அதிபர் ட்ரம்ப் கூறி​னார். அதன்​பின் ஏவு​கணை மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது உறு​தி​யானது.

          

இதையடுத்து இது தவறாக நடை​பெற்ற தாக்​குதல் என கூறப்​பட்​டது. பழைய தரவு​களின் அடிப்​படை​யில் ஈரான் ராணுவ தளம் இருந்த ஒரு பகு​தி​யில் பள்ளி கட்​டிடம் அமைந்​திருந்​த​தால், தவறாக நடை​பெற்ற தாக்​குதல் என கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஐ.நா மனித உரிமை கவுன்​சில் கூட்​டத்​தில் ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி வீடியோ மூலம் நேற்று ஆற்​றிய உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரான் பள்ளி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் திட்​ட​மிட்டு நடத்​தப்​பட்​டது. நவீன தொழில்​நுட்​பங்​கள் மூலம் துல்​லிய தாக்​குதல் நடத்​து​வ​தாக அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் ஆகியவை கூறுகின்​றன.

அப்​படி​யிருக்​கும்​போது இது தவறான தாக்​குதல் என்​பதை யாரும் நம்ப மாட்​டார்​கள். இந்த தாக்​குதல் போர்க் குற்​றம். இதற்கு அனைத்து தரப்​பினரும் கண்​டனம் தெரிவிக்க வேண்​டும். அராஜகத்தை நியாயப்​படுத்​த​வும் முடி​யாது, மறைக்​க​வும்​ முடி​யாது. இவ்​வாறு அராக்​சி கூறி​னார்​.

SCROLL FOR NEXT