உலகம்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் ‘திடீர்’ தாக்குதலின் பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஈ​ரான் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்​குதலை தொடுத்​திருப்​பது தொடர்​பான பின்​னணி தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அமெரிக்​கா, ஈரான் இடையே இருதரப்பு அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய ஓமன் வெளி​யுறவு அமைச்​சர் பஃதர் பின் ஹமாத் அல் புசைடி நேரடி​யாக அமெரிக்கா​வுக்கு சென்​றார். மேலும் ஈரான் மீது தாக்​குதல் நடத்​தக்​கூ​டாது என்று பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி உள்ளிட்ட ஐரோப்​பிய நாடுகளும் அமெரிக்​காவை தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தன.

          

இந்தச் சூழலில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் அமெரிக்க நேரப்​படி வெள்​ளிக்​கிழமை நள்​ளிர​வில் (ஈரானில் காலை 9.30 மணி) ஈரான் மீது தாக்​குதல் நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென உத்​தர​விட்​டார். அந்த நேரத்​தில் ஆளும் குடியரசு கட்சி மற்​றும் ஜனநாயக கட்சி தலை​வர்​கள் தூக்​கத்​தில் இருந்​த​தால் யாருக்​கும் தகவல் தெரிய​வில்​லை.

தகவல் இல்லாமல் தாக்குதல்:

ஈரான் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய கிழக்​கில் உள்ள நட்பு நாடு​களான சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார், குவைத் உள்ளிட்ட நாடு​களுக்​கும் அமெரிக்க அரசு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​க​வில்​லை. அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வும் மட்​டும் கலந்​தாலோ​சித்து ஈரான் மீது திடீர் தாக்​குதல் நடத்​தி​யிருப்​ப​தாக அமெரிக்க ஊடகங்​கள் தெரிவித்துள்​ளன.

முன்னதாக, ‘அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த ஈரான் 10 நாட்​களுக்​குள் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​தார். அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்​குதல் நடத்​து​வோம் என ஈரான் கூறியது.

அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த ஈரான் நீண்​ட​கால​மாக மறுத்து வரு​வதால், அதன் மீது தாக்​குதல் நடத்தி அங்கு ஆட்சி மாற்​றத்தை கொண்டு வரு​வது​தான் தீர்வு என அமெரிக்க அதிபர் டரம்ப் முடிவு செய்​துள்​ளார். இதற்​காக அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் மத்​திய கிழக்கு பகு​திக்கு செல்ல அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்​டிருந்​தார்.

ஐக்​கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்​தார், குவைத் மற்​றும் ஜோர்​டான் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்க முகாம்​களில் அமெரிக்க விமானப் படை​யின் போர் விமானங்​களும், சரக்கு விமானங்​களும் குவிக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில்தான், ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள அயத்துல்லா அலி காமேனி​யின் அலு​வல​கங்​கள், அதிபர் மசூத் பெஜஸ்​கி​யான் ஆகியோரது அலு​வல​கங்​கள், இல்​லங்​களை குறி​வைத்து இஸ்​ரேல், அமெரிக்க படைகள் நேற்று வான் தாக்​குதல் நடத்​தின. இதில் காமேனி​யின் இல்​லம் அருகே பலத்த சேதம் ஏற்​பட்​டுள்​ளதை செயற்​கைக்கோள் படங்​கள் உறுதி செய்​தன.

பதில் தாக்​குதல்:

ஈரான் மீது இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்​கப் படைகள் தாக்​குதல் நடத்​தி​யதும், ஈரான் பதில் தாக்​குதலில் இறங்​கியது. இஸ்​ரேல் நோக்கி ஈரான் தொலை​தூர ஏவு​கணை​களை வீசி​யது. இவற்றை இடைமறித்து அழிக்​கும் நடவடிக்​கை​யில் இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்​கப் படைகள் ஈடு​பட்​டன.

இதனிடையே, “உலகின் தீவிர​வாத மைய​மாக ஈரான் உரு​வெடுத்து உள்​ளது. அண்​மை​யில் ஈரான் அரசுக்கு எதி​ராக போராடிய ஆயிரக்கணக்​கான மக்​களை அந்த நாட்டு ராணுவம் கொன்று குவித்​தது. அணு ஆயுத திட்​டத்தை கைவிட அந்த நாடு மறுக்​கிறது.

அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்கு ஈரான் மிகப் ​பெரிய அச்​சுறுத்​தலாக நீடிக்​கிறது. இந்த அச்​சுறுத்​தலை முறியடிக்​கவே தற்​போது அந்த நாடு மீது தாக்​குதல் தொடுக்​கப்​பட்டு இருக்​கிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT