உலகம்

ஈரான் தடுத்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் கொள்ளையர்கள் போல நடந்து கொண்டோம்: ட்ரம்ப் ஒப்புதல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கொள்​ளை​யர்​கள் போல நடந்து கொண்டு கச்சா எண்​ணெய் கப்​பல்​களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் - ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்​காக பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்ய முன்​வந்​ததைத் தொடர்ந்து போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது.

இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் தடுப்​பு​களை ஏற்படுத்​திய போதும், கச்சா எண்​ணெய்யை ஏற்​றிச் சென்ற ஒரு கப்பலை கைப்​பற்​றிய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 லட்​சம் பேரல் கொண்ட கச்சா எண்​ணெய்யை ஏற்​றிச் சென்ற கப்​பலை இடைமறித்து அதை தங்​களது கட்​டுப்​பாட்​டில் எடுத்​துக் கொண்​ட​தாக அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “நாங்​கள் அந்​தக் கப்பலில் இருந்த சரக்​கைக் கைப்​பற்​றினோம். எண்​ணெய்​யைக் கைப்​பற்​றினோம். இது மிக​வும் லாபகர​மான தொழில். நாங்​கள் கடற்​கொள்​ளை​யர்​களைப் போன்​றவர்​கள்” என்று கூறி​யுள்​ளார்.

உலகளா​விய எண்​ணெய் விநி​யோகத்​துக்​கான முக்​கிய பாதை​யாகதை் திகழும் ஹார்​முஸ் ஜலசந்தி உள்​ளிட்ட முக்​கிய நீர்​வழிகளில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதி​கரித்​து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT