உலகம்

அமெரிக்​காவுடன் இணைந்து ட்ரோன்​களை தயாரிக்க உக்ரைன் திட்டம்: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

செய்திப்பிரிவு

கீவ்: அமெரிக்கா​வும் உக்​ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்​ட​மிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்​பாக தனி​யார் ஊடகத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 4 ஆண்​டு​களுக்கு முன்பு உக்​ரைனை, ரஷ்யா ஆக்​கிரமித்​தது. அப்​போது முதல் ஈரானின் ஷாஹெட் ட்ரோன்​களை ரஷ்ய ராணுவம் போரில் பயன்​படுத்தி வரு​கிறது.

ஒரே நேரத்​தில் சுமார் 800-க்​கும் மேற்​பட்ட ட்ரோன்​கள் உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்​தின. இதனால் உக்​ரைனில் பெரும் சேதங்​கள் ஏற்​பட்​டன. ரஷ்​யா​வின் ட்ரோன் தாக்​குதல்​களை முறியடிக்க மிகக் குறைந்த விலை​யில் நாங்​களே ட்ரோன்​களை தயாரித்​தோம். இதன்​மூலம் ரஷ்ய ராணுவத்​தின் ட்ரோன் தாக்​குதல்​களை வெற்​றிகர​மாக முறியடித்து வரு​கிறோம்.

தற்​போது மத்​திய கிழக்​கில் போர் தீவிரமடைந்து உள்​ளது. அமெரிக்க ராணுவ தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ட்ரோன் தாக்​குதல்​களை முறியடிப்​ப​தில் உக்​ரைன் ராணுவம் நிபுணத்​து​வம் பெற்​றிருக்​கிறது. எனவே ஈரானின் ட்ரோன் தாக்​குதல்​களை முறியடிக்க உக்​ரைன் ராணுவத்​தின் உதவியை அமெரிக்கா நாடி​யிருக்​கிறது.

          

எங்​கள் நாட்​டில் இருந்து 3 சிறப்பு குழுக்​கள் மத்​திய கிழக்கு பகு​திக்கு சென்று உள்​ளன. இந்த குழுக்​களில் தொழில்​நுட்ப நிபுணர்​கள், ராணுவ அதி​காரி​கள், இன்​ஜினீயர்​கள் இடம் பெற்று உள்​ளனர். அமெரிக்கா​வும் உக்​ரைனும் இணைந்து ட்ரோன்​களை தயாரிக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

இதுதொடர்​பான பரிந்​துரையை அமெரிக்க அதிபர் மாளி​கை​யிடம் கடந்த ஆண்டு வழங்​கினோம். அமெரிக்க அதிபர் மாளிகை ஒப்​புதல் அளித்த பிறகு இரு நாடு​களும் இணைந்து ட்ரோன்​களை தயாரிக்​கும். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு வாங்​கு​வதை உலக நாடு​கள் முழு​மை​யாக தவிர்க்க வேண்​டும். இதை கண்​டிப்​புடன் பின்​பற்​றி​னால் உக்​ரைன் போர் விரை​வில் முடிவுக்கு வரும்.

ரஷ்ய கச்சா எண்​ணெய் மீதான பொருளா​தார தடையை அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடு​களும் ஒரு​போதும் நீக்​கக்​கூ​டாது. ரஷ்​யா​வின் கச்சா எண்​ணெய் விற்​பனை அதி​கரித்​தால் அந்த நாடு மேலும் வலு​வடை​யும். இதை தடுக்க அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடு​களும் ஓரணி​யாக செயல்பட வேண்​டும். ரஷ்​யா​வுக்கு எதி​ரான பொருளா​தார தடைகளை மேலும் கடுமை​யாக்க வேண்​டும்​. இவ்​வாறு உக்​ரைன்​ அதிபர்​ விளாடிமிர்​ ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT