உலகம்

அதிபர் புதின் இல்லம் மீது உக்ரைன் தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கவலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்​லம் மீது உக்ரைன் தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படும் நிலை​யில் அதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி ஆழ்ந்த கவலை தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபரின் இல்​லம் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக வரும் செய்​தி​கள் ஆழ்ந்த கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

தற்​போது நடந்​து​கொண்​டிருக்​கும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமை​தியை அடைவதற்​கான மிக சாத்​தி​ய​மான வழி​முறை ராஜதந்​திர முயற்​சிகள் மட்​டுமே ஆகும். சம்​பந்​தப்​பட்ட அனை​வரும் இந்த முயற்​சிகளில் மட்​டுமே தங்​களது முழு கவனங்​களை செலுத்த வேண்​டும். அதனை பலவீனப்​படுத்​தும் எந்​தவொரு செயலை செய்​வதை​யும் தவிர்க்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா-உக்​ரைன் போர் தொடங்​கிய​திலிருந்து அதற்கு தீர்​வாக பேச்​சு​வார்த்தை மற்​றும் ராஜதந்​திர நடவடிக்​கைகளை மட்​டுமே பிரதமர் மோடி வலி​யுறுத்தி வரு​கிறார்.

ரஷ்ய வெளி​யுறவு அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் திங்​கள்​கிழமை கூறுகை​யில், “​மாஸ்கோ மற்​றும் செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க்​கிற்கு இடை​யில் நோவ்​கோரோட் பிராந்​தி​யத்​தில் உள்ள புதினின் அதி​காரப்​பூர்வ இல்​லத்​தின் மீது டிசம்​பர் 28, 29 தேதி​களில் 91 ட்ரோன்​களை பயன்​படுத்தி உக்​ரைன் தாக்​குதல் நடத்​தி​யது. இவை இடைமறித்து வீழ்த்​தப்​பட்​டன. இந்த சம்​பவத்​தில் எந்த சேதமோ, உயி​ரிழப்​பு​களோ ஏற்​பட​வில்லை. தற்​போது நடை​பெற்று வரும் அமை​திப் பேச்​சு​வார்த்​தைகளில் இந்த தாக்​குதல் பாதிப்பை ஏற்​படுத்​தும்” என்​றார்.

இதுகுறித்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி எக்ஸ் தளத்தில் கூறுகை​யில், “நான்கு ஆண்டுகளாக நீடிக்​கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் நான் மேற்​கொண்ட முயற்​சிகளை ரஷ்​யா​வின்​ இந்​த குற்​றச்​​சாட்​டு பலவீனப்​படுத்​தும்​. இதனை அனு​ம​திக்​க முடி​யாது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT