பெய்ஜிங்: சீனாவில் ராணுவ ஜெனரல் ஜாங் யூசியா மற்றும் லியு ஜென்லி ஆகியோர் கட்சி தலைமைக்கு (ஜி ஜின்பிங்) மிரட்டல் விடுக்கும் வகையில்செயல்படுவதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுக்கங்கள், சட்டங்களை மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இருவரையும் பிடித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று சீன ராணுவத்தின் பிஎல்ஏ டெய்லி பத்திரிகை நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஜாங் யூசியா பொலிட்பீரோ உறுப்பினராகவும், ராணுவ துணைத் தலைவராகவும் இருக்கிறார். அதேபோல் லியு ஜென்லி கூட்டு பணியாளர் துறை தலைமை அதிகாரியாக இருக்கிறார்.