உலகம்

துருக்கியில் இஸ்ரேலிய தூதரகம் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

இஸ்தான்புல்: அமெரிக்க- ஈரான் போர் நேற்று 39-வது நாளை எட்டியது. இந்நிலை​யில், துருக்கி​யின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்​ரேலிய தூதரக கட்டிடத்திற்கு அருகில் நேற்று 3 பேர் துப்​பாக்​கி​யால் சுட்டு தாக்​குதல் நடத்​தி​யுள்​ளனர்.

இதையடுத்து அவர்​களுக்கு எதி​ராக போலீ​ஸார் பதில் தாக்​குதல் நடத்​தினர். இதில் இரு​வர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் காயத்​துடன் பிடிபட்​டார். மேலும் இரு தரப்பு மோதலில் போலீஸ் அதி​காரி ஒரு​வர் காயம் அடைந்​தார். இதைத் தொடர்ந்து தூதரக கட்​டிடம் அமைந்​துள்ள பகு​திக்கு போலீ​ஸார் 'சீல்' வைத்​து, தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வந்​தனர்.

          

இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடை​பெற்று வருவதாக துருக்​கி​யின் நீதித்​துறை அமைச்​சர் அகின் குர்​லெக் தெரி​வித்​தார். தாக்​குதல் நடத்​தி​ய​வர்​களின் அடையாளம் அல்​லது அவர்​களின் நோக்​கம் குறித்து இது​வரை எந்​தத் தகவலும் வெளி​யிடப்​பட​வில்​லை.

ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தற்கு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​ண​யித்த காலக்​கெடு நேற்று முடிவுக்கு வந்​தது. இந்​நிலை​யில் காலக்​கெடு​வின் இறுதி நாளில் இந்த தாக்​குதல் நடந்​தது இஸ்​தான்​புல் நகரில் பதற்றத்​தை ஏற்​படுத்​தி​யது.

SCROLL FOR NEXT