அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி | கோப்புப்படம்

 
உலகம்

ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திக்க வாய்ப்பு

வேட்டையன்

வாஷிங்டன்: ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அமெரிக்க அதிபரின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா ஆகிய ஐரோப்​பிய நாடு​களில் 6 நாட்​கள் அரசு முறைப் பயணம் மேற்​கொண்டுள்ளார். அவரது பிரான்ஸ் பயணம் 2 கட்​டங்​களாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்​டுக்​கும் இடைப்​பட்ட காலத்​தில் அவர் ஸ்லோவேக்​கி​யா​வில் பயணம் மேற்​கொள்​கிறார். பிரதமர் மோடி தனது முதல்​கட்ட பிரான்ஸ் பயணத்​தில் அந்​நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானுடன் நீஸ் நகரில் இன்று (ஜூன் 14) இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​துகிறார்.

அதன் பின்னர் ஸ்லோவேக்​கி​யா நாட்டுக்கு பயணிக்கிறார். பின்னர் மீண்​டும் பிரான்ஸ் திரும்​பும் பிரதமர் மோடி, ஜூன் 16, 17 ஆகிய தேதி​களில் எவி​யான் நகரில் நடை​பெறும் ஜி-7 உச்சி மாநாட்​டில் கலந்து கொள்​கிறார். இந்த உச்சி மாநாட்​டுக்கு இடையே, உலகத் தலை​வர்​களு​டன் இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யும் பிரதமர் மோடி மேற்​கொள்​வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இது இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையாக இருக்கும் என தகவல். மேலும், இந்த சந்திப்பின் போது உலக நாடுகளில் நிலவும் சூழல், போர் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் என்ற அங்கீகாரத்தை பெட்ரா பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.

“இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ள எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அவர் மிகச்சிறந்த பிரதமர்! அவர் வலிமையான, ஆரோக்கியமான மற்றும் ஞானம் கொண்டவர். அவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றுவார்” என்று ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருந்தார். இருவரும் பொதுவெளியில் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ட்ரம்ப்பின் வாழ்த்து அமைந்திருந்தது.

SCROLL FOR NEXT