உலகம்

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 13 பேர் பலி, 100 பேர் காயம்

வெற்றி மயிலோன்

ஓசாகா: மெக்சிகோவின் தென்கிழக்கு ஒசாகா பிராந்தியத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர் என்று மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.

மெக்சிகோ வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே பயணித்த ரயிலில் 241 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். நிசாண்டா நகரத்துக்கு அருகே ஒரு வளைவில் திரும்பும்போது ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதை கடற்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 98 பேர் காயமடைந்தனர், அவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம் தெரிவித்தார்.

பசிபிக் கடற்கரையில் உள்ள சலினா குரூஸ் துறைமுகத்தை வளைகுடா கடற்கரையில் உள்ள கோட்சகோல்கோஸுடன் இணைக்கும் இந்த இன்டர்ஓசியானிக் ரயிலில் 2 என்ஜின்களும், 4 பயணிகள் பெட்டிகளும் இருந்தன என்று கடற்படை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT