வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று டாக்கா திரும்பினார். குண்டு துளைக்காத பேருந்தில் வரும் அவர், பிஎன்பி கட்சித் தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.படம்: பிடிஐ

 
உலகம்

வங்கதேச அரசியலில் முக்கிய திருப்பம்: கலீதா ஜியா மகன் நாடு திரும்பினார்

டாக்கா விமான நிலையத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும், வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின் (பிஎன்​பி) செயல் தலை​வருமான தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​களுக்கு பிறகு நேற்று ​நா​டு திரும்பி​னார். கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வங்கதேசத்தில் மாணவர்​களின் போராட்​டத்​தால் பிரதமர் பதவியை ராஜி​னாமா செய்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். வங்கதேசத்தில் தற்​போது முகமது யூனுஸ் தலைமையி​லான இடைக்​கால அரசுஉள்ளது. அங்கு பிப்​.12-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. தற்​போதைய சூழலில் வங்​கதேச தேசி​யவாத கட்சி (பிஎன்​பி), மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்சி (என்​சிபி), அடிப்​படை​வாத கட்சியான ஜமாத் - இ – இஸ்​லாமி ஆகியவை தேர்​தல் களத்​தில் உள்​ளன.

இந்நிலையில், வங்​கதேச முன்​னாள் பிரதமரும், பிஎன்பி கட்​சி​யின் தலை​வரு​மான கலீதா ஜியா (80) உடல்​நலக் ​குறை​வால் பாதிக்​கப்​பட்டுள்​ளார். இந்த சூழலில் கலீதா ஜியா​வின் மகனும், பிஎன்பி கட்​சி​யின் செயல் தலை​வரு​மான தாரிக் ரஹ்​மான் பிரிட்​டனில் இருந்து நேற்று வங்​கதேச தலைநகர் டாக்கா​வுக்கு திரும்​பி​னார்.

அவாமி லீக் கட்சி கூட்​டத்​தில் கையெறி குண்​டு​களை வீசிய வழக்​கில் கடந்த 2004-ம் ஆண்​டில் தாரிக் ரஹ்​மானுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. அதோடு அவர் மீது 84 ஊழல் வழக்​கு​களும் பதிவு செய்​யப்​பட்​டன. இதில் பல்​வேறு வழக்​கு​களில் அடுத்​தடுத்து தண்​டனை​கள் விதிக்​கப்​பட்​டன. கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கைது செய்​யப்​பட்​டார்.

அப்​போதைய பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுடன் ரகசி​ய​மாக உடன்​பாடு செய்துகொண்ட தாரிக் கடந்த 2008-ம் ஆண்டு செப்​டம்​பரில் ஜாமீனில் விடு​தலை​யா​னார். அதே ஆண்டு செப்​டம்​பரில் மனை​வி, குழந்​தை​யுடன் இங்கிலாந்து தலைநகர் லண்​டனில் அவர் குடியேறி​னார். சுமார் 17 ஆண்​டு​கள் அரசி​யல் துறவறம்

பூண்​டிருந்த அவர் மீண்​டும் வங்​கதேச அரசி​யலில் கால் பதிக்​கிறார். வரும் பொதுத்​தேர்​தலில் பிஎன்பி கட்​சி​யின் பிரதமர் வேட்​பாள​ராக அவர் களமிறங்​கு​கிறார்.

டாக்கா விமான நிலை​யத்​தில் நேற்று லட்சக்கணக்கான பிஎன்பி தொண்​டர்​கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்​மானை வரவேற்​றனர். அவரது மனைவி ஜூபை​தா, மகள் ஜைமா ஆகியோ​ரும் உடன் வந்​துள்​ளனர். குண்டுதுளைக்​காத பேருந்​தில் தாரிக் ரஹ்​மானும் குடும்​பத்​தினரும் டாக்​கா​வில் உள்ள வீட்​டுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். டாக்கா திரும்​பிய பிறகு, தாரிக் ரஹ்​மான், இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, போதிய பாது​காப்பு வழங்​கியதற்​காக அவர் யூனுஸுக்கு நன்றி தெரி​வித்​தார்.

பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத்​தேர்​தலில் ஹசீ​னா​வின் கட்சி போட்​டி​யிட தடை வி​திக்​கப்பட்டு உள்ள நிலை​யில் பிஎன்​பி வெற்​றிபெற்​று கலீ​தா ஜியா​வின்​ மகன் தா​ரிக்​ ரஹ்​மான்​ பிரதம​ராக பதவி​யேற்​க வாய்ப்​பு உள்ள​தாகஅரசியல்​ நோக்​கர்​கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்து இளைஞர் கொலை: இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர் ராஜ்பரி நகருக்கு அருகே உள்ள ஹோசென்டங்கா கிராமத்தை சேர்ந்த அம்ரித் மொண்டல் (எ) சாம்ராட் (29) என தெரியவந்துள்ளது. சாம்ராட் மற்றும் சிலர் சேர்ந்துஒரு வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி, அவரை சரமாரியாக தாக்கிஉள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT