ட்ரம்ப்

 
உலகம்

“ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக செல்கிறது” - ட்ரம்ப் தகவல்

டெக்ஸ்டர்

வாஷிங்டன்: ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரானுக்கு அருகிலுள்ள வடக்குக் கடல் பாதை வழியாகவும், வெளியேறும் கப்பல்கள் ஓமன் நாட்டின் கடல் பகுதி வழியாகவும் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தற்காலிக ஒப்பந்தக் காலத்தில் எவ்வித போக்குவரத்துக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், மையப் பாதையில் உள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற ஈரானும் ஓமனும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், "அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் பட்சத்திலேயே ஹார்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும்" என்று ஈரான் எச்சரித்துள்ளது. அதேவேளையில், பேச்சுவார்த்தை உடன்பாட்டில் முடியாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT