உலகம்

9 மாதங்களுக்குப் பிறகு இம்ரான் கானை சந்தித்த சகோதரி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவியும் சந்திப்பு

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: உச்ச நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியதை அடுத்து, பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் கானை 9 மாதங்​களுக்​குப் பிறகு முதல் முறை​யாக சிறை வளாகத்​தில் அவரது சகோ​தரி சந்​தித்​தார்.

பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாப் (பிடிஐ) கட்​சி​யின் நிறு​வனரும் முன்​னாள் கிரிக்​கெட் வீரரு​மான இம்​ரான் கான் (73), கடந்த 2018 முதல் 2022 வரை பிரதம​ராக பதவி வகித்​தார். அவரது பதவிக் காலத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​த​தாக வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், அல்​-​கா​திர் அறக்​கட்​டளை ஊழல் வழக்​கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்​பிண்​டி​யில் உள்ள ஆதியாலா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

உடல்​நிலை தொடர்ந்து மோசமடைந்து வரு​வதை அடுத்​து, இம்​ரானை 2 நாட்களில் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கு​மாறு பாகிஸ்​தான் உச்ச நீதி​மன்​றம் நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டது. அவரது குடும்​பத்​தினர் சந்திக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்​து, இம்​ரான் கானை அவரது சகோ​தரி நோரீன் நியாசி ஆதி​யாலா சிறை வளாகத்​தில் உள்ள அறை​யில் 15 நிமிடங்​கள் சந்தித்​துப் பேசி​னார். கடந்த 9 மாதங்​களில் இரு​வரும் சந்​திப்பது இது​தான் முதல் முறை. இதையடுத்​து, சிறை​யில் அடைக்கப்பட்டுள்ள இம்​ரான் கானின் மனைவி புஸ்ரா பிபி​யுடன் இம்​ரான் கான் சிறை​யில் உள்ள அறை​யில் சந்​தித்​துப் பேசினார்.

மறுஆய்வு மனு தாக்கல்

இதனிடையே, இம்ரான் கானை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் அரசு நேற்று மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

SCROLL FOR NEXT