உலகம்

ஹாடி கொலை வழக்கில் 2 சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பியோட்டம்: வங்கதேச போலீஸார் தகவல்

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேசத்​தில் மாணவர் சங்க தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி கொலை வழக்​கில், சந்​தேக நபர்​கள் இரு​வர் வங்​கதேசத்தை விட்டு தப்பி சென்​று​விட்​ட​தாக​வும், அவர்​கள் இந்​தி​யா​வில் இருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது என அந்​நாட்டு போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

வங்​கதேச மாணவர் சங்க தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி (32) தலைநகர் டாக்​கா​வில் கடந்த 12-ம் தேதி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​போது, துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டார். சிகிச்​சைக்​காக அவர் சிங்​கப்​பூர் கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு அவர் கடந்த 18-ம் தேதி உயி​ரிழந்​தார். இதனால் வங்​கதேசத்​தில் இந்​துக்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. தீபு சந்​திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்​துக் கொல்​லப்​பட்டு எரிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் ஹாடி கொலை வழக்கு தொடர்​பாக டாக்கா கூடு​தல் காவல் ஆணை​யர் நஸ்​ருல் இஸ்​லாம் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ஹாடி கொலை வழக்​கில் பைசல் கரீம் மசூத் மற்​றும் அலாம்​கிர் ஷேக் ஆகியோர் முக்​கிய குற்​ற​வாளி​களாக சந்​தேகிக்​கப்​படு​கின்​றனர். அவர்​கள் இரு​வரும் வங்​கதேசத்தை விட்டு தப்​பி​விட்​டனர்.

மேகாலயா வழி​யாக: அவர்​கள் மேகாலயா வழி​யாக இந்​தி​யா​வுக்​குள் சென்​று​விட்​டனர். மேகல​யா​வுக்கு சென்​றவுடன் அவர்​களை புர்தி என்​பர் அழைத்​துச் சென்​றுள்​ளார். பிறகு சாமி என்ற டாக்சி டிரைவர் அவர்​களை மேகால​யா​வின் துரா நகருக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். இவ்​வாறு நஸ்​ருல் இஸ்​லாம் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படைகள் மறுப்பு: வங்கதேசத்தில் மாணவர் சங்க தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியை சுட்டுக் கொன்றவர்கள் மேகாலயாவின் ஹல்உகாட் எல்லை வழியாக இந்தியாவில் நுழைந்ததாக வங்கதேச போலீஸார் கூறுவதை இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும், மேகாலயா போலீஸாரும் மறுத்துள்ளனர்.

"எல்லையில் தீவர கண்காணிப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசம் தெரிவிப்பது தவறான கருத்து என மேகாலயாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி உபாத்யாய் கூறியுள்ளார். "வங்கதேச கொலையில் சந்தேகிக்கப்படும் நபர்கள் காரோ மலைப் பகுதியில் இருப்பதாக எந்த உளவுத் தகவலும் வரவில்லை" என மேகாலயா காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT