இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க

 
உலகம்

அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்கையில் அமெரிக்​கா​வின் 2 போர் விமானங்​கள் தரை​யிறங்க அனு​மதி மறுக்​கப்​பட்​டது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக இலங்கை நாடாளு​மன்​றத்​தில் நேற்று அவர் கூறிய​தாவது: டிஜி​போத்தி விமானப் படை தளத்​தில் நிலைநிறுத்​தப்​பட்​டிருந்த 2 அமெரிக்க போர் விமானங்​களை இலங்​கை​யின் மத்தள விமான நிலை​யத்​தில் தரை​யிறக்க அமெரிக்க அரசு அனு​மதி கோரியது. இதற்கு அனு​மதி மறுத்​து​விட்​டோம்.

          

இதன்​பிறகு கடந்த 9 முதல் 13-ம் தேதி வரையி​லான காலத்​தில் ஈரான் கடற்​படை​யின் 3 கப்​பல்​கள் இலங்கை கடல் எல்​லைக்​குள் நுழைய அனு​மதி கோரப்​பட்​டது. நமது நாட்​டின் நடுநிலையை கருத்​தில் கொண்டு அதற்​கும் அனு​மதி மறுக்​கப்​பட்​டது.

அமெரிக்க ஏவு​கணை தாக்​குதலில் ஈரான் கப்​பல் கடலில் மூழ்​கியது. மனி​தாபி​மான அடிப்​படை​யில் அந்த கப்​பலில் இருந்து 84 பேரை காப்​பாற்​றினோம். 32 பேரின் உடல்​களை​ மீட்​டோம். மேலும் மனி​தாபி​மான அடிப்​படை​யில் ஈரானின் ஒரு கப்​பலுக்கு மட்​டும் கொழும்​பில் தஞ்​சம் அளித்​தோம்.

அமெரிக்​கா, ஈரானுடன் இலங்கைக்கு நட்​புறவு நீடிக்​கிறது. அமெரிக்​கா, ஈரான் போரால் இலங்​கை​யில் எரிபொருள், எரி​வா​யுவுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழலை புரிந்து கொண்டு எதிர்க்​கட்​சிகள் செயல்பட வேண்​டும். இவ்​வாறு திசநாயக்க தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதரும், மத்​திய ஆசி​யா​வுக்​கான அமெரிக்க சிறப்பு தூதரு​மான செர்​ஜியோ கோர் கொழும்​பில் நேற்று முன்​தினம் இலங்கை அதிபர் அனுர குமார திசா​நாயக்​கவை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது போரி​னால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் குறித்து அமெரிக்க தூதரிடம் இலங்கை அதிபர் விரி​வாக எடுத்​துரைத்​தார். அதே​நேரம், போரில் இலங்​கை​யின் நிலைப்​பாட்​டை அமெரிக்​க தூதர்​ கேட்​டறிந்​தார்​.

SCROLL FOR NEXT