பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தேசியப் பயிற்சிப் பட்டறை: அவ்வையாரின் கொன்றை வேந்தன் நூல் மொழிபெயர்ப்பு

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தேசியப் பயிற்சிப் பட்டறை: அவ்வையாரின் கொன்றை வேந்தன் நூல் மொழிபெயர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாராணசி​யில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்​தில்​ (பிஎச்​யு) அவ்​வை​யாரின் கொன்றை வேந்​தன் நூல் தொடர்​பான தேசி​யப் பயிற்​சிப் பட்​டறை கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இந்​தப் பட்​டறையை மத்​திய அரசின் இந்​திய மொழிகள் துறை மற்​றும் செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம் இணைந்து நடத்​தின. இந்​தி​யா​வின் மத்​தி​யப் பல்​கலைக்​கழகங்​களு​டன் இணைந்து தமிழ் இலக்கிய நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கும் பணியைச் செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி) ​விரி​வாகச் செய்து வரு​கிறது.

அதன்​படி, முதல் கட்​ட​மாக சிஐசிடி நிதி​யுத​வி​யுடன் டெல்லி பல்​கலைக்​கழகப் பேராசிரியர்​கள், மாணவர்​கள் இணைந்து அவ்​வை​யாரின் புகழ்​பெற்ற ஆத்​திசூடி நூலை 60-க்​கும் மேற்​பட்ட இந்​திய மற்​றும் அயலக மொழிகளில் மொழிபெயர்த்​துள்​ளனர்.

மேற்கு வங்க மாநிலத்​தி​லுள்ள விஸ்வ பாரதி பல்​கலைக்​கழகம், சிஐசிடி உதவி​யுடன் மகாகவி சுப்​பிரமணிய பார​தி​யாரின் ‘பு​திய ஆத்​திசூடி’ நூலை 60-க்​கும் மேற்​பட்ட இந்​திய மற்​றும் உலக மொழிகளில் மொழிபெயர்த்​துள்​ளது.

12 அயலக மொழி: இதையடுத்​து, பிஎச்யு பேராசிரியர்​கள், ஆய்​வாளர்​கள் மற்​றும் மாணவர்​கள் அவ்​வை​யாரின் கொன்றை வேந்​தன் நூலை இந்​திய மற்​றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்​கும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​திய அரசமைப்​புச் சட்​டம் 8-ம் அட்​ட​வணை​யில் உள்ள பெரும்​பாலான மொழிகளி​லும், பல வடகிழக்கு மாநிலங்​களின் மொழிகளி​லும் இந்​நூல் மொழிபெயர்க்​கப்​படு​கிறது. தவிர சீனம், ஜப்​பானி​யம், பிரெஞ்​சு, ஜெர்​மன், கொரியன், சிங்​களம் முதலிய 12 அயலக மொழிகளி​லும் கொன்றை வேந்​தன் மொழிபெயர்க்​கப்​படு​கிறது.

இதற்​கான பட்​டறையை தொடங்கி வைத்த பிஎச்யு துணை வேந்​தர் அஜித் குமார் சதுர்​வேதி கூறிய​தாவது: கி.பி. 12-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த தமிழரின் வாழ்​வியல் அறநெறி மற்​றும் சமூகக் கருத்​துக்​களை எடுத்​துரைக்​கும் நூல் கொன்றை வேந்​தன். இந்த மொழிபெயர்ப்பு முயற்​சிகள் வெறும் இலக்​கியப் பரி​மாற்​ற​மாக மட்​டுமல்​லாமல், மொழிகளுக்கு இடையே​யான பண்​பாட்டு உரை​யாடலை வலுப்​படுத்​தும் பால​மாக​வும் செயல்​படு​கின்​றன கொன்றை வேந்​தனை 40-க்​கும் மேற்​பட்ட இந்​திய மற்​றும் அயலக மொழிகளில் மொழிபெயர்ப்​பது இந்த மொழிபெயர்ப்​புப் பட்​டறை​யின் முக்​கிய நோக்​க​மாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

தொடர்ந்​து, தமிழ் உதவிப் பேராசிரியர் ஜெகதீசன் 3 நாள் பயிற்சி பட்​டறை​யில் கொன்றை வேந்​தன் நூலின் கருத்​துகளை விளக்கி மொழிபெயர்ப்பது எப்படி என்று எடுத்​துரைத்​தார்.

கலைப்​புல முதன்​மையர் பேராசிரியர் சுஷ்மா கில்​டி​யால், இந்​திய மொழிகள் துறை​யின் தலை​வர் தி​வாகர் பிர​தான், வரலாற்​றுத் துறை பேராசிரியர் கங்​காதரன், பிரெஞ்சு துறை பேராசிரியர் வசுமதி பத்​ரி​நாதன் உள்​ளிட்​டோர்​ இந்​நிகழ்​வில்​ சிறப்​புரை​யாற்​றினர்​.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தேசியப் பயிற்சிப் பட்டறை: அவ்வையாரின் கொன்றை வேந்தன் நூல் மொழிபெயர்ப்பு
ஏடிஎம்மில் சிக்கிய ரூ.10,000-க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in