லண்டன்: இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ளது ஹவுன்ஸ்லோ பகுதி. இங்கு 20 பள்ளிகள் உள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தப் பள்ளிகளில் பயிலும் டீன் ஏஜ் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைக்கின்றனர். பின்னர் இவர்களை தங்கள் குழுவினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த இளம் பெண்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
இந்தக் கும்பல் இங்கிலாந்து பெண்களை மட்டும் அல்லாமல் லண்டனில் உள்ள சீக்கிய பெண்களையும் தங்கள் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். லண்டன் ஹவுன்ஸ்லோ பகுதியைச் சேர்ந்த சீக்கிய டீன் ஏஜ் பெண்ணுக்கு, சுமார் 35 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் வலை விரித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு 13-வயது இருக்கும்போதே அவர் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு 16-வயது ஆனவுடன் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி அவரை காதலித்த நபர் தூண்டியுள்ளார்.
இவரிடமிருந்து சீக்கிய இளம் பெண்ணை மீட்கும் முயற்சியில் ‘ஏகே மீடியா 47’ என்ற சீக்கிய குழுவைச் சேர்ந்த சுமார் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் லண்டனில் பல நடந்து வருகின்றன. ஆனால், இனவாத குற்றச்சாட்டை ஏற்படுத்தும் என்பதால், இச்சம்பவங்களை போலீஸாரும், உள்ளூர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். இதுபோன்ற சம்பவங் களை இங்கிலாந்து அரசு தடுக்க தவறி விட்டதாக எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க்கும் கடந்தாண்டு குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.