“கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது” - அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு

ட்ரம்ப்

ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன்: பிரான்​ஸ், ஜெர்​மனி உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடுகளின் பரப்​பளவுக்கு இணை​யாக ஆர்​டிக் பகு​தி​யில் அமைந்​துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்​லாந்து உள்​ளது.

இது டென்​மார்க் நாட்​டின் கீழ் தன்​னாட்சி பிராந்​தி​ய​மாக உள்​ளது. கிரீன்​லாந்தை சுற்​றி​யுள்ள கடல் பகு​தி​கள் தற்​போது ரஷ்​யா, சீன கப்​பல்​களால் நிரம்​பி​யுள்​ள​தாக​வும் அதனால் பாது​காப்பு காரணங்​களுக்​காக அமெரிக்கா​வுடன் கிரீன்​லாந்து இணைக்​கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் அறிவித்​தார். இதற்கு டென்​மார்க் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் கிரீன்​லாந்தை அமெரிக்​கா​வின் 51-வது மாகாணமாக இணைப்​பது தொடர்​பான மசோ​தாவை அமெரிக்க குடியரசு கட்சி எம்​.பி.​யான ராண்டி பைன் அமெரிக்க நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்​ளார். இதற்கு சர்​வ​தேச அளவில் கண்​டனங்​கள் எழுந்​துள்​ளன.

இதனிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், டென்​மார்க் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் லார்ஸ் லோக்கே ராஸ்​முசன், கிரீன்​லாந்து வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் விவியன் மோட்​ஸ்​பெல்ட்டை சந்​தித்​து் கிரீன்லாந்து விவகாரம் பற்றி பேசவுள்​ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்போது, ‘‘அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து இருப்பதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது’’ என்றார்.

<div class="paragraphs"><p>ட்ரம்ப்</p></div>
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in